பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் “பெண்மை” மகளிருக்கான பிரத்யேக மையம் துவக்கம்
பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் “பெண்மை” என்னும் மகளிருக்கான சிறப்பு மருத்துவ ஆலோசனை பிரிவு துவங்கப்பட்டது.
மருத்துவர் ஜெயந்தி தலைமையில் உளவியல் ஆலோசகருடன் கூடிய மருத்துவ குழுவினர் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன் மற்றும் மருத்துவர் ஜெயந்தி கூறுகையில்,
நவீன கால மருத்துவ உலகில் பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக பல்வேறு அதிநவீன சிகிச்சை முறைகளும், மருத்துவர்களும் புதிதாக உருவாகிறார்கள்.
ஆனால சில உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு பெண்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. முக்கியமாக தாம்பத்யம் சம்பந்தப்பட்ட பெண்களின் அணுகுமுறை மற்றும் அது சம்பந்தமான சந்தேகங்களை யாருடன் கேட்பது என தெரியாமல் மனதினுள் வைத்து குழப்பமடைகின்றனர்.
இந்த பெண்மை எனும் புதியதாக துவங்கப்பட்ட ஆலோசனை மையமானது தாம்பத்யம் சம்பந்தமான பெண்களின் பிரச்னைகளை மருத்துவ ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கண்டறியப்பட்டு சரிசெய்வதற்கான ஒரு தீர்வு மையமாக விளங்குகிறது.
இந்த ஆலோசனை மையத்தின் முதன்மை மருத்துவர் ஜெயந்தி இங்கிலாந்தில் இதற்கான சிறப்பு பட்டம் பெற்ற மருத்துவர் ஆவார். அவரது தலைமையில் இந்த “பெண்மை” எனும் மகளிருக்கான ஆலோசனை மையம் செயல்படுகிறது. மேற்கூறப்பட்ட பிரச்னை உள்ள பெண்கள் இவருடன் ஆலோசனை செய்து தங்களது குறைகளையும், சந்தேகங்களையும் நிவர்த்திசெய்து கொள்ளலாம்.