பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் ஆதரவு குழு கூட்டம்
பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் பேரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை துறை சார்பில் 10வது ஆதரவு குழு கூட்டம் நடைபெற்றது.
மருத்துவமனை இயக்குநர் புவனேஸ்வரன் சிறப்புரையாற்றுகையில், உடல் பருமன் இழப்பு மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதன் பயன்கள், கடினங்கள், எதிர்கொள்ளும் முறை உள்ளிட்ட அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும். இறுதியாக இதனை எதிர்கொள்ளும் மன தைரியத்தைக் கட்டாயம் ஒவ்வொருவரிடம் இருக்க வேண்டியது அவசியமானது என்றார்.
சிறப்பு விருந்தினராக நடிகை லட்சுமி பங்கேற்றுச் சிறப்பித்தார்.
இறுதி நிகழ்வாக உடல்பருமன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வாழ்க்கைத் தரம் பற்றி குழு கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சை பயனாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.