பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்
பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் வெள்ளிக்கிழமை மருத்துவமனை கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர் அனுராதா தலைமை தாங்கினார். பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் புவனேஸ்வரன், பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீன் சுப்பாராவ் மற்றும் பாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறந்த செவிலியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
மேலும், செவிலியர்களுக்கு தனிப்பாடல் போட்டி, ரங்கோலி போட்டி, வினாடி வினா போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.