பி எஸ் ஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி சார்பில் தேசிய பாதுகாப்பு தினம் கடைபிடிப்பு
பிஎஸ்ஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி சார்பாக 53வது தேசிய பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
காலை 10 மணியளவில் துவங்கிய இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட தலைமை தீயணைப்பு அதிகாரி P புளுகாண்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தீத்தடுப்பு மற்றும் அவசரகால உதவிகள் குறித்து அனைவருக்கும் விளக்கமளித்தார்.
பி எஸ் ஜி மருத்துக்கல்லூரி முதல்வர் Dr. T M சுப்பாராவ் மற்றும் பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் Dr. J.Sபுவனேஸ்வரன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். பி எஸ் ஜி மருத்துவக்கல்லூரி மற்றும் இணை மருத்துவப்படிப்பை சார்ந்த மாணாக்கர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
பி எஸ் ஜி மருத்துவமனையின் தீத்தடுப்பு மற்றும் அவசர கால உதவி துறையை சார்ந்த ஊழியர்களால் தீ விபத்து மற்றும் அவசரகால உதவிகள் குறித்த நேரடி பயிற்சி முறைகள் மற்றும் தீத்தடுப்பு ஒத்திகைகள் இந்நிகழ்ச்சியின்போது செய்து காண்பிக்கப்பட்டது.