news-and-events

News

உதவும் மனப்பான்மை ஒற்றுமையை வளர்த்தும்  – குடியரசு தின விழாவில் பி.எஸ்.ஜி.மருத்துவமனை இயக்குநர் புவனேஸ்வரன்.

உதவும் மனப்பான்மை ஒற்றுமையை வளர்த்தும் – குடியரசு தின விழாவில் பி.எஸ்.ஜி.மருத்துவமனை இயக்குநர் புவனேஸ்வரன்.

.
  • பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மற்றும்  மருத்துவமனை சார்பாக இந்தியத் திருநாட்டின் 75-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் பி.எஸ்.ஜி. பாதுகாவலர்கள் சார்பாக அணிவகுப்பு  மரியாதையும் நடைபெற்றது. விழாவில் பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் புவனேஸ்வரன் தேசியக்கொடியை  ஏற்றி வைத்தார். அவர் பேசுகையில், சமுதாய மாற்றம் என்பது நம் ஒவ்வொருவரிடமிருந்து துவங்க வேண்டும். நமது மாற்றமே நாட்டின் மாற்றமாகும். தனிமனிதனாக நாம் செய்யும் நற்செயல்களே நம்மோடு சேர்த்து நாட்டிற்கும் நற்பெயராக உருவாகும். மற்றவர்களுக்கு  உதவுவது என்ற கொள்கையை வாழ்வில் எப்போதும் நமக்கு உயர்நிலையையே பெற்றுத்தரும். ஜனநாயகம் என்பதன் அடிப்படையே ஒற்றுமையின் வலிமையை எடுத்துரைப்பதாகும். நாம் மற்றவர்க்கு உதவும் மனப்பான்மையை வளர்ப்பதன் மூலம் ஒற்றுமையை வளர்க்கலாம். நம் பெருமையுடன் நாட்டின் பெருமையையும் இதன் மூலம் உயர்த்தலாம் என்ற கருத்தினை மொழிந்தார். இதில் பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் சுப்பாராவ், துணை முதல்வர் ஜெகதீஸ்ராஜ், செவிலியர் கல்லூரி முதல்வர் ஜெயசுதா, மருந்தியல் கல்லூரி துணை முதல்வர் ஷங்கர் மற்றும் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர்  பங்கேற்றனர். சிறப்புப் பார்வையாளர்களாக சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 30 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் அணிவகுப்பு மரியாதையைக் கண்டுகளித்தனர். உடன் பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி  மாணவ மாணவிகள், மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி உயர் அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட பங்கேற்றனர்.

Copyrights © 2024 PSG Hospitals. All Rights Reserved.