சிறப்பு விருந்தினராக மெட்ராஸ் இ.என்.டி ஆராய்ச்சி பவுண்டேஷன் பத்மஸ்ரீ டாக்டர் மோகன் காமேஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து பி.எஸ். ஜி மருத்துவமனை இ.என்.டி ஆலோசகர் டாக்டர் ஆனந்த், பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பிறவியிலேயே காது கேட்காத, பேச இயலாத 300 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.
பிறவிலேயே காது கேட்காத, பேச இயலாத குழந்தைகளுக்கு, அரசு காப்பீடு திட்ட மூலம் இலவசமாக அறுவை சிகிச்சைகள் பி. எஸ்.ஜி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே, இது போன்ற குறைபாடு உள்ளவர்கள் மருத்துவமனையை அணுகி பயன்பெறலாம் என பி.எஸ்.ஜி மருத்துவர் தெரிவித்தார்.


Copyrights © 2025 PSG Hospitals. All Rights Reserved.