PSG Insurance Dept is headed by a Assistant Manager along with a team of 25 employees. PSG Hospitals offers cashless facility for patients through tie-up with most of the top private insurance companies, Government insurance schemes, ESI and CMCHIS. Hassle free cashless facility is extended to insurance patients. High-end Procedures are being carried out successfully under CM Scheme. Cardio related ailments are treated under ESI. We also provide assistance to patient for Insurance reimbursement claims.





























To explain clearly about the terms & conditions for availing cashless facility to the patient.
The terms & conditions for providing cashless facilities to the patient.
The final approval will have the final eligible amount and remarks on exclusions like non-medical expenses , co-payment and other disallowances the cost of which has to be born by the patient. Hence after collecting the same the patient can be discharged.
If the total claim is denied the patient has to be treated as per hospital norms.
PSG மருத்துவமனையின் மருத்துவக் காப்பீட்டுத் துறையானது மேலாளர் மற்றும் 25 பணியாளர்கள் கொண்ட தனி குழுவாக செயல்படுகிறது. PSG மருத்துவமனையில் பெரும்பாலான முன்னணி தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், அரசு காப்பீட்டுத் திட்டங்கள், ESI மற்றும் CMCHIS ஆகியவற்றுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நோயாளிகளுக்குப் பணமில்லாமல் சிகிச்சை பெரும் வசதியை வழங்கியுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் உயர்தர சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு ESI திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீங்கள் காப்பீடு மூலமாக சிகிச்சைபெற விரும்பினால் உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் தெரியப்படுத்தி, பின்பு எங்களது மருத்துவக்காப்பீட்டு துறை ஊழியரை அணுகவேண்டும். உங்களது மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களால் சிகிச்சை பெறுவதற்கு முன்பாகவோ அல்லது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 24-48 மணி நேரத்திற்குள் உங்களது மருத்துவக்காப்பீடு மூலம் நீங்கள் கட்டணமில்லா சிகிச்சை பெறுவதற்கான உறுதியை எங்களது மருத்துவக்காப்பீட்டு துறையின் மூலமாக உறுதிப்படுத்திக்கொள்ளலாம். நேரடியாக காப்பீடு நிராகரிக்கப்பட்டு பணம் செலுத்தி சிகிச்சை பெறுபவர்களுக்கு காப்பீட்டுத் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் நோயாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.





























தனியார் மருத்துவ காப்பீடு மூலமாக கட்டணமில்லாமல் சிகிச்சை பெறுவதற்கான (Cashless Claims) நடைமுறைகள்:
அடையாள அட்டைகள் மூலம் பணமில்லா சிகிச்சை வசதி உள்ளதா என்பதைச் சரிபார்த்தல்:
பயனாளிகளுக்கு (நோயாளிக்கு) உங்களது மருத்துவக்காப்பீடு நிறுவனத்தல் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் மூலமாக மருத்துவமனை நிர்வாகம் நோயாளியை அடையாளம் காணும்.
காப்பீட்டு அட்டையில் பாலிசிதாரர் புகைப்படம் மற்றும் கையொப்பம் அல்லது கைரேகை இருக்க வேண்டும். மருத்துவமனையில் சேர வேண்டிய தேவை ஏற்படும் போதெல்லாம், பாலிசிதாரர் தங்கள் அடையாள அட்டை மற்றும் பாலிசி நகலைக் கொண்டு வர வேண்டும். மருத்துவமனையின் காப்பீட்டுத் துறை ஊழியர் அடையாள அட்டை மற்றும் பாலிசி நகல் மூலம் பின்வரும் விவரங்களைச் சரிபார்ப்பார்: மருத்துவக்காப்பீட்டு நிறுவனத்தின் பெயர், நோயாளியின் பெயர் மற்றும் எழுத்துப்பிழை, அட்டை செல்லுபடியாகும் காலம், வயது சரிபார்ப்பு மற்றும் புகைப்படம் சரிபார்க்கப்படும்.
ஏற்கனவே உள்ள நோய்களுக்கான காப்பீட்டு வரம்பு (Pre-existing coverage) மற்றும் காப்பீட்டுத் தொகை (Sum-insured). நோயாளிக்கு பணமில்லா சிகிச்சை வசதியைப் பெறுவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைத் தெளிவாக விளக்கப்படும்.
முன்-அனுமதி (Pre-Authorization) நோயாளிக்கு பணமில்லா சிகிச்சை வசதிகளை வழங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்.
ஒரு மருத்துவர் நோயாளியை மருத்துவமனையில் சேர்க்கத் திட்டமிடும்போது, காப்பீட்டுத் துறை ஊழியர் அடையாள அட்டை, புகைப்பட அடையாளச் சான்று மற்றும் பாலிசி நகல் ஆகியவற்றைச் சரிபார்த்து, சம்பந்தப்பட்ட முன்-அனுமதிப் படிவத்தை (pre-authorization form) பூர்த்தி செய்து, மருத்துவரின் முத்திரையுடன் கையொப்பம் பெறுவார். நோயாளி அல்லது உடன் இருப்பவர் முன் அனுமதிப் படிவத்தில் கையொப்பமிட்டு தங்கள் தொடர்பு எண்ணைக் குறிப்பிட வேண்டும். திட்டமிடப்பட்ட சிகிச்சையாக (planned admission) இருந்தால், நோய் தொடர்பான பரிசோதனை அறிக்கைகளுடன் படிவம் காப்பீட்டு நிறுவனத்திற்கு (IC) அனுப்பப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பே இதைச் செய்யலாம்.
குறைந்தபட்சம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சிகிச்சைக்கான அங்கீகாரம் பெற உங்களது காப்பீட்டு நிறுவனத்திற்கு முன்-அனுமதிப் படிவம் அனுப்பப்பட வேண்டும். ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், மருத்துவமனையின் காப்பீட்டுத் துறை ஊழியர் அது குறித்து TPA-விடம் தெரிவிக்க வேண்டும்.
சிகிச்சைக்காக காப்பீட்டு நிறுவனம் வழங்கும் முன்-அனுமதி ஒப்புதலில் பின்வரும் விவரங்கள் இடம்பெற்றிருக்கும்: உத்தரவாதத் தொகை, வார்டு/தனி அறைக்கான கட்டண வரம்புகள், அறுவை சிகிச்சை கட்டணம் போன்றவை,பயனாளிக்கான தகுதி மற்றும் காப்பீட்டுத் திட்டத்தின்படி ஒப்புதல் கடிதத்தின் செல்லுபடியாகும் காலம்.
மருத்துவமனையில் சேருவதற்கான கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரும் நோய்க்கான அவசியமான சிகிச்சைச் செலவுகளுக்கு மட்டுமே கட்டண உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. முன்-அனுமதிக்கு அப்பாற்பட்டு நோயாளியின் கோரிக்கையின் பேரில் செய்யப்படும் எந்தவொரு பரிசோதனை அல்லது சிகிச்சைக்கான கட்டணங்களையும் நோயாளியே ஏற்க வேண்டும்.
சிகிச்சைச் செலவு அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறும்போது, ஒப்புதல் தொகையை உயர்த்துவதற்காக, இடைக்காலக் கட்டணப் பட்டியல் (interim bill) மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் விளக்கக் கடிதம் ஆகியவை அனுப்பப்படுகின்றன. மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நேரத்தில் (discharge), இறுதிக்கட்டணம் (final bill), கட்டண விவரப் பட்டியல் (break-up bill), சிகிச்சை விவரங்கள் (discharge summary), மருந்தகக் கட்டண(Pharmacybill) விவரங்கள் மற்றும் மருத்துவக்காப்பீட்டு நிறுவனம் கோரும் பிற தகவல்களை அனுப்பி இறுதி ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
இறுதி ஒப்புதல் கிடைத்ததும், நோயாளியை மருத்துவமனையிலிருந்து விடுவிப்பதற்கு முன் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இறுதி ஒப்புதலில், அனுமதிக்கப்படக்கூடிய இறுதித் தொகை மற்றும் மற்றும் அனுமதிக்கப்படாத பிற செலவுகள் போன்ற விலக்கீடுகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருக்கும்; மருத்துவமனையின் இறுதி கட்டணத்தை காப்பீட்டு நிறுவனம் இறுதி செய்தபின் அங்கீகரிக்கப்படாத செலவுகளை நோயாளியே ஏற்க வேண்டும். எனவே, அத்தொகையை நோயாளி கட்டிய பின் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவர்.
அதிகரிக்கப்பட்ட தொகைக்கு (enhancement amount) காப்பீட்டு நிறுவனம் அனுமதி அளிக்கவில்லையெனில், அந்த தொகையை நோயாளியிடமிருந்து வசூலிக்கப்படும்.
காப்பீட்டு நிறுவனத்திடம் முன் அங்கீகாரம் கோரப்பட்ட மொத்தத் தொகைக்கும் அனுமதி மறுக்கப்பட்டால், மருத்துவமனையின் நேரடி கட்டண விதிமுறைகளின்படி நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படும்.


Copyrights © 2026 PSG Hospitals. All Rights Reserved.